உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

(பொ-ரை ) இசையும் நீ; அறுசுவையும் நீ; ஞாயிறும் நீ; குளிர்ந்த கதிரையுடைய திங்களும் நீ; பெண்ணாய் விளங்கு வோனும் நீ; ஆணாகத் திகழ்வோனும் நீ; வேற்றுமைப் பொருளும் நீ ; ஒற்றுமைப் பொருளும் நீ.

"செங்காலிற்"

சிவந்த நின் காலால், கரிய இயமனது தலை உருளுமாறு உதைத்தாய்; சங்குகள் நிரம்பிய கடலில் கண்வளரும் திருமாலுக்குப் படைக்கலமாகிய ஆழிப்படையைக் கொடுத்தாய்.

"ஆராலும்”

எவராலும் அளவிட்டு உரைத்தற்கு அரிய உன்னை ஒருகையில் ஏந்திய நீராலும் மலராலும் நெஞ்சம் உருகுமாறு செய்து விடலாம்.

(வி-ரை) கருங்காலன் சிரம் உருள உதைத்தது; மார்க் கண்டேயனுக்காக, கருங்காலன்-வலிய காலனுமாம். 'செங்காலில் கருங்காலன்' என்பதில் முரண்தொடையும், 'சங்காழி முகுந் தனுக்குச் சங்காழி' என்பதில் மடக்கும் அமைந்துள் "ஆராலும்... பணலாமே" என்பதில் இறைவன் அருமையும், அடியார் அவனைக் காண்டற்கு எளிமையும் குறிக்கப் பெற்றது.

என வாங்கு' என்று சொல்லும் படி,

"வேற்று மருந்தால்"

(பொ-ரை) வேறு எம் மருந்தாலும் தீராத கொடிய பிறவி நோயைத் தீர்க்கும் மருந்தாக மலைமேல் மருந்தாய் உள்ளவனே, அழகிய தலைவியாகவும், திருவருளுடைய தலைவியாகவும், புனுகு பூசிய தலைவியாகவும் விளங்கும் அம்மையை இடப் பாகத்தில் கொண்ட தூயனே, காசியில் உயிர் துறந்தும், திருவாரூரில் பிறந்தும், புகழமைந்த திருத் தில்லையில் திருநடம் கண்டும் அரிதாகப் பெறும் பேறுகள் எல்லாவற்றையும் ஒருமுறை னைத்தவர்க்கு உடனே அருள்கின்ற திருவருளை விரும்பி "அடியேன் துன்பக் கடலில் மூழ்கிவிடாமல் எடுத்தருள்வாயாக" என்று உன்னை அடைக்கலம் அடைந்தேன்.

46

(வி-ரை) ஒருகால் கருதினர்க்கு அளிக்கும் கருணைமிக்க அருணைச் சிறப்பை,

"துவக்கற அறிந்து பிறக்குமா ரூரும்

துயர்ந்திடா தடைந்துகாண் மன்றும்