உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

உவப்புடன் நிலைத்து மரிக்குமோர் பதியும் ஒக்குமோ நினைக்குநின் னகரைப்

பவக்கடல் கடந்து முத்தியங் கரையில் படர்பவர் திகைப்பற நோக்கித்

தவக்கலம் நடத்த உயர்ந்தெழும் சோண

சைலனே கைலைநா யகனே"

71

என்னும் சோணசைலமாலைச் செய்யுளானும் (2) அறிக. 'மருந்தா' என்பவற்றுள் முன்னது 'மருந்தாக' என்பதன்

தொகுத்தல்; பின்னது விளி.

"மருந்தா! புனித! அடியேன்

எடுத்தருள்" என இயைக்க.

டர்க்கடல் புகுதாது

தரவு என்பது பாடலின் முகவுரை போன்றது. அது பாடல் தரும் பொருளை முதற்கண் தந்து நிறுத்துவது என்னும் காரணப் பொருட்டது.

தாழிசை என்பது தாழம் பட்ட ஓசையுடையது. ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருதல் தாழிசையின் பொதுத்தன்மை து மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஆகலின் முதற்கண் ஏழுதாழிசையும் பின்னே மூன்று தாழிசையும் ஆகத் தாழிசை பத்தாக வந்தது.

அராகம் என்பது முடுகுநடையுடையது. ஒற்றிடைப்படாத நிரையசைகளாலே நடையிடுவது அராகத்தியல் பாகும்.

அம்போதரங்கம் என்பது கரைசாரச் சாரச் சுருங்கிவரும் நீர்த்திரை போன்ற அடிவரவுடையது. நாற்சீரடி, முச்சீரடி, இருசீரடி என அடியளவு சுருங்கி வந்தமை அறிக.

சுரிதகம் என்பது முடிநிலை, கலிப்பாவின் சுரிதகம் ஆசிரியச் சுரிதகத்தாலேனும் வெண்சுரிதகத் தாலேனும் வரும். இஃது ஆசிரியச் சுரிதகம் ஆகும். (1)

2. எண்ணுங்கால் எல்லாம் இவர்

நேரிசை வெண்பா

வேதநுவல் சோணகிரி லித்தகர்க்கார் வேறாவார் சோதியிய மானனிவர் சோமனிவர் -ஆதவனும் மண்ணும்கா லும்புனலும் வானுமழல் தானுமிவர் எண்ணுங்கால் எல்லாம் இவர்.