உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம்-38

(பொ-ரை) மறைநூல்களால் கூறப்படுகின்ற அண்ணா மலை வித்தகர்க்கு வேறாவார் யார்? எவரும் இவர்; ஒளிமிக்க ஆன்மாவும் இவர்; திங்களும் இவர்; ஞாயிறும், மண்ணும், காற்றும், நீரும், வானும், தீயும் ஆகிய இவைதாமும் இவரே; ஆதலால் ஆராய்ந்து பார்க்கும் பொழுது எல்லாமும் இவரேயாம்.

(வி-ரை) இறைவன் எண்வகை வடிவினை இதன்கண் உரைத்தார். எண்வகை வடிவு அட்டமூர்த்தம்; வித்தகம் - திறம். ஆர் வேறாவார் என்பதை 'வேறாவர் ஆர்' என இயைக்க. இயமானன் - இயக்கமானவன்; அஃதாவது உயிர்.

“அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான் அவனே புவிபுனல்காற்றாவான் - அவனே இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய்ஞான

மயனாகி நின்றானும் வந்து”

என்பார் காரைக்கால் அம்மையார் (அற்புதத் திருவந்தாதி. 21)(2)

3. இவர் அசைவின் அல்லாது அணுவும்

அசையாது

கட்டளைக் கலித்துறை

எல்லா உயிர்க்கும் உயிர்அரு ணேசர்; இவரசைவின்

அல்லா தணுவும் அசையாத தென்ப தறிந்தனமே; வில்லாடன் மாரன் இருக்கவும் யோகம் விளைத்தவந்நாள் புல்லா திருந்தன எல்லா உயிரும்தம் போகத்தையே

(பொ-ரை) கரும்பு வில்லால் வெற்றிகொள்ளும் காமன் எரிந்து படாமல் உயிருடன் இருக்கவும், சிவபெருமான் தவம் செய்த அந்நாளில் உயிர்கள் எல்லாமும் தம் நுகர்ச்சிகளைப் பொருந்தாமல் இருந்தன; இதனால் எல்லா உயிர்களுக்கும் உயிராயவர் அருணேசர் என்பதையும், இவர் அசைவினால் அல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்பதையும் தெளிவாக அறிந்தோம்.

(வி-ரை) இறைவன் சனகர் முதலிய முனிவர்களுக்குத் தவ நெறியை உணர்த்துதற்காகக் கல்லால மரத்தின் கீழ் ஒரு தனி யோகத்தின் அமர்ந்தார். அப்பொழுது உயிர்கள் எல்லாம் போகத்தைத் துறந்து யோகத்தை மேற்கொண்டன என்பதைக் கூறுதலால் அவனன்றி ஓரணுவும் அசையாது' என்பதை