உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

73

விளக்கினார். வில் ஆடல் மாரன் வில்லால் வெல்லும் மன்மதன், அவன்வில் கரும்புவில் என்க. (3)

4. கோகனகத் தாள் நினைத்துக் குழைவீர் கலித்துறை

போகம் விடுத்தே தாகம் எடுத்தே புவிமீதே யோகம் விளைத்தே ஆகம் இளைத்தே உழல்வீர்கள்! ஆகம வித்தார் மோகம வித்தார் அருணேசர்

கோக னகத்தாள் ஆகம் நினைத்தே குழைவீரே.

(பொ-ரை) இவ்வுலகிலேயே, உலகியல் இன்பங்களை எல்லாம் விட்டு, வீடுபேற்றை அடைதலில் பேரார்வம் கொண்டு தவம் செய்து உடல் மெலிந்து துன்புறுபவர்களே, சிவாகமப் பொருளின் வித்தாக இருப்பவரும், பற்று என்பது அறவே இல்லாதவரும் ஆகிய அண்ணாமலையாரின் தாமரை போன்ற திருவடிகளை மனத்தில் நினைத்து உருகுவீராக.

(வி-ரை) உடலை வருத்தும் துறவினால் பெறமுடியாத இறைவன் அருளையும் அவனை நினைந்து உருகும் உருக்கத்தால் எளிதில் கொள்ளலாம் என்றவாறு. ஆகம் உடல்; ஆகம் நினைத்தே என்பதில் அகம் என்பது ஆகம் என நீண்டது, வித்தார் மூலமானவர்; கோகனகம் -

தாமரை.(4)

5. மாலை இரக்கம் பிறப்பியாதோ? அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

குழையடுத்த விழியிடத்தர் மழுவலத்தர்

அருணையத்தர் குளிர்வெற் பூடே மழையெடுத்த துளிநனைக்க மடிசுருக்கி

மயிர்பொடித்து வருந்தும் சேதா தழையடுத்த இடையர்பற்று குழலிசைக்கு

மனமுருக்கித் தளரும் மாலை

பிழையடுத்த மொழியுரைத்த தலைவருக்கு

மிகஇரக்கம் பிறப்பி யாதே?

இது, கார்காலம் வருமுன் வருவேன் என்று பிரிந்த தலைவன் கார்காலம் கண்டும் வாராமை கண்ட தலைவி, மாலைப் பொழுதில் அவனை நினைந்து இரங்கி உரைத்தது.