உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

75

(வி-ரை) நான்முகனும் திருமாலும் அன்னமாகவும் பன்றியாகவும் சிவன் முடியும் அடியும் தேடிய செய்தி முன்னரும் உரைத்தார்.(1). யாதவர் குலத்து மாதவன் என்பது கண்ணன் தோற்றரவு பற்றிக் கூறியது. ஏனம் - பன்றி; ஓதிமம் - அன்னம்; அபரம் - எதிர்; பிணக்கு. (6)

7. வெற்ற ராயினும் முத்தர் ஆவர் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பரவை யாடினும் நதிகள் ஆடினும்

படியெ லாம்நடந் தடிகள் தேயினும் குரவர் ஆயினும் கனலில் நின்றதன்

கொதிபொ றுக்கினும் கதிகி டைக்குமோ?

அரவம் ஆடுசெஞ் சடிலர் அங்கணார் அமுதர் தாள்நினைத் தடியர் தம்மொடு விரவி நீறணிந் தருணை சேர்வரேல் வெற்றர் ஆயினும் முத்தர் ஆவரே.

(பொ-ரை) கடல்நீரில் ஆடினாலும், ஆற்று நீரில் ஆடினாலும், உலகெல்லாம் நடந்து கால்கள் தேய்ந்தாலும், குருவாக விளங்கினாலும், தீயில் நின்று அதன் வெப்பத்தைப் பொறுத்தாலும் வீடுபேறு கிடைக்குமோ? கிட்டாது.பாம்பு ஆடும் சிவந்த சடையுடையவர், அழகிய நெற்றிக்கண்ணர், அமுதர் ஆகிய சிவபெருமான் திருவடிகளை நினைந்து அடியார் களுடன் கூடி, திருநீறணிந்து கொண்டு திருவருணைப்பதியை அடைவார்களாயின், அவர்கள் எத்தகைய பேறும் இலராயினும் வீடுபேறு எய்தியவர் ஆவர்.

(வி-ரை) "தாள் நினைந்து... சேர்வரேல் என்பதில் அடியார் வழிபடு முறையை விளக்கினார். வெற்றர் - ஒன்றும் இல்லாதவர்.பரவை - கடல்; படி உலகம்; குரவர் குரு; கதி - வீடுபேறு; சடிலர் - சடையுடையவர்; அம்கணார் (அங்கணார்) - அழகிய நெற்றிக் கண்ணர்; விரவி - கூடி, கலந்து. (7)

-

-