உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம்-38 8. நாராய்! எப்படி நம்புவது? பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

முத்தமிழ் முறைமுறை அன்பொடும்

அப்பர் கவுணியர்சொல் சுந்தரர்

முப்பொ ழுதுமெதிர் புகழ்ந்திடு முதுநூலார் அத்தர் அருணையில் நெடுந்திரை

தத்து திருநதியின் மென்பெடை

அச்ச மறவுடன் அணைந்துறை மடநாராய்!

ஒத்த மனதோடு புணர்ந்தவர்

சற்றும் அகல்வதிலை என்றவர்

உற்ற துணையென இருந்தவர் உளம்வேறாய் எத்தனை கபடம் நினைந்தவர்

கைப்பொருள் கருதி நடந்தனர்

எப்படி இறைவரை நம்புவ தினநாமே.

இது, பொருள்வயின் பிரிந்த தலைவனைப் பற்றித் தலைவி நாரையை முன்னிலையாக்கிக் கூறியது.

(பொ-ரை) முத்தமிழ் முறையும் திருமுறையும் ஒன்றிய அன்பும் கூடிய திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்,புகழ்வாய்ந்த சுந்தரர் ஆகிய மூவரும் காலை நண்பகல் மாலை ஆகிய முப் பொழுதுகளிலும் நேரே நின்று புகழ்ந்துபாடும் பழைமையான தேவாரத் திருமுறைகளையுடையவராகி சிவபெருமான் கோயில் கொண்ட திருவருணையில், பெரிய அலைகள் தாவி எழுகின்ற திருநதி எனப்படும் வளமான ஆற்றில் இள ளமையான பெட்டை யுடன் அச்சமின்றிக் கலந்துறையும் அழகிய நாரையே! ஒருப்பட்ட மனத்துடன் கூடியிருந்தவரும், சிறிதும் பிரிவது இல்லை என்ற வரும், உயிரொடும் ஒன்றிய துணையென இருந்தவரும் ஆகிய தலைவர் மனம் வேறுபட்டவராய் எவ்வளவு வஞ்சத்தை உட்கொண்டு எளிய பொருள் தேடுவதைக் கருதிப் பிரிந்து சென்றார். இவ்வாறாக அவரை இனி நாம் எப்படி நம்புவது? அறியேம்.

(வி-ரை) நாம் என்ற தன்மைப்பன்மை நாரையையும் உட்கொண்டது. நெடுந்திரையின் அலைக்கழிப்பு உண்டாயினும், அச்சமற்று அணைந்து உறையும் நாரையின் பேறு பெரிது; அப்பேறு தனக்கு இன்று என்பாளாய்க் கூறினாள். தலைவர்