உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

77

சொல்லும் செயலும் நினைந்து நினைந்து பன்னுவாளாய், "ஒத்த மனதொடு... நடந்தனர்" என்றாள். 'கை, சிறுமையடையுமாகலின் தன் வெறுப்புப் புலப்படக் கூறினாள். என்னால் வெறுக்கத்தக்க பொருள் என்னும் பொருட்டுமாம். 'நினைந்தவர்' என்பதை நினைந்து, அவர் எனப் பிரித்துக் கைப்பொருளுடன் இயைத்துக் கொள்க."மடநாராய்! இனம் நாம் இறைவரை எப்படி நம்புவது" என்று தொடராக்குக.

கவுணியர் குடிப்பெயர்; எதிர் புகழ்ந்திடுதல் - நேரே நின்று பண்ணோடு பாடுதல். புகழ்ந்தவை 'வாளா' ஒழியாமல் முது நூலாயமை சுட்டினார்; 'திருமுறை' என்பதற்குக் காரணம் சுட்டினார். 'முத்தமிழ் முறைமுறை' என்பதில். முதல் மூன்று திருமுறைகளும் திருஞானசம்பந்தரும், அடுத்த மூன்று திருமுறை களும் திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறை சுந்தரரும்

அருளியவையாம்.(8)

9. அருணகிரி அடிகளின் அடிகள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இனமகலும் அருகர்மட மிசையிலிடு கனல்மதுரை

இறைவனுடல் புகமொழிவரே;

கனகமுக படகவள கரடதட விகடமத

கரியின்மதம் அறநினைவரே;

வனமருவும் அருமுதலை ஒருமதலை தரவினிய மதுரகளி மொழிமுதல்வரே; அனகரபி நயரதுலர் அமலரெம தருணகிரி

அடிகள்தம தடியவர்களே.

(பொ-ரை) பாவமற்றவரும், கூத்தாடுபவரும், ஒப்பற்ற வரும், மலமில்லாதவரும் ஆகிய எம் அருணாசலக் கடவுளின் அடியவர்கள், திரண்ட கூட்டத்தாராகிய சமணர், தாம் தங்கியிருந்த மடத்தில் வைத்த தீயை மதுரை வேந்தன் உடலில் புக ஏவுவர்; பொன் முகபடாம் அணிந்ததும், கவளம் கொள்வதும், மதம்பொழிவதும் ஆகிய மிகப்பெரிய மதயானையின் செருக்கு ஒழியுமாறு நினைவர்; நீரில் வாழும் வலிய முதலை தான் உண்ட ஒருகுழந்தையை மீண்டும் தருமாறு இனிய கவிபாடும் முதன்மை யானவரும் ஆவர்.