உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

(வி-ரை)

-

இளங்குமரனார் தமிழ்வளம் 38

மங்கையர்க்கரசியார் குலச்சிறையார்

அழைப்பினால் மதுரைக்குச் சென்ற திருஞான சம்பந்தர் திருமடத்தில் தங்கினாராகச் சமணர்கள் கூடி அம் மடத்தில் தீ வைத்தனர். அத் தீயை மக்கள் செய்யும் பழிக்கு மன்னவனே பொறுப்பு ஆகலின், "பையவே சென்று பாண்டியர்க்கு ஆக" என்று ஏவினார். இப் பாண்டியன் மாறவர்மன் அரிகேசரி எனவும் கூன்பாண்டியன் எனவும் சுந்தரபாண்டியன் எனவும் வழங்கப் பெறுவான். இவ் வரலாறு முதலடியில் கூறப்பெற்றது. சமண சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மா மாறிய திருநாவுக்கரசரின் மேல் வெறுப்புக் கொண்ட பல்லவ வேந்தன் மகேந்திரவர்மன் ஏவிய கொலை யானையை நிலைமாற்றி அனுப்பிய செய்தி இரண்டாம் அடியில் குறிக்கப் பெற்றது.

அவிநாசித் திருக்குளத்தில் இருந்த முதலையால் கொள்ளப் பெற்ற குழந்தையைப் பாவிசைப் பதிகம் பாடி மீட்டுத் தந்த சுந்தரர் செய்கை மூன்றாம் அடியில் சுட்டப் பெற்றது.

அனகர்-பாவம் இல்லாதவர்; அபிநயர் -கூத்தர்; அதுலர் ஒப்பற்றவர்; கரடம் - மதம் பாய் சுவடு; விகடம் - அழகு; வனம் நீர். மூவர் முதலிகளின் திருவருட் செயல்களில் ஒவ்வொன்றை எடுத்தோதினார். (கூ)

10. ஒருவசனம் சொல ஒண்ணாதோ? எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடியவர் சிந்தையில் இனிதுறை சங்கரர்

அருணைவ ளம்பதி அன்னாரே

படியினெ டுங்கரி அனையம தங்கொடு பதறிந டந்திடு மின்னாரே ஒடியும ருங்கென உணர்கிலிர் நின்றினி

ஒருவச னஞ்சொல ஒண்ணாதோ? கடியச ரங்களின் இளைஞரு டன்பல

கலகவி தம்பயில் கண்ணாரே!

இது பொதுமகளைக் கண்ட காமூகன் ஒருவன் புலம்புரையாம்.

(பொ-ரை) அடியவர் உளத்தில் இனிது வாழும் சிவ பெருமானது அருணை என்னும் வளமிக்க ஊரை ஒத்தவர்களே, நிலத்தில் பெரிய யானை போன்ற மதத்துடன் பதறி நடையிடும்