உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

79

ஒளிமிக்க பெண்களே, கொடுமையாக ஊடுருவித்தாக்கும் கணையைப் போல இளைஞர்களுடன் பலவகையான இன்பப் போர்புரிதலைப் பழகிய கண்ணையுடையவர்களே, உங்கள் இடை ஒடியும் என்பதை உணரீர்! நீங்கள் சற்றே நின்று ஒரே ஒரு சொல் சொல்லமாட்டீரோ?

(வி-ரை) வளமையான ஊரை நலந்திகழ் நங்கையர்க்கு உவமையாக்குதல் மரபு. ஆகலின் 'அருணை வளம்பதி அன்னார் என்றார்; யானையை மகளுக்கு உவமை கூறியமையால் அது பெண் யானை என்க. பெண் யானைக்கும் மதமுண்மை பெருங்கதையால் அறியலாம்.

"பெருங்கோ நங்கை பெட்ப ஏறிய

இருங்கை இளம்பிடி கடச்செருக் கெய்தி”

என்பது அது (1.40 : 30-31).

,

'அன்னாரே' 'மின்னாரே' என்பவையும், 'ஒண்ணாதோ' கண்ணாரே' என்பவையும் இயைபுத் தொடையாம். 'இறுதி இயைதல் இயைபு' என்பது இயைபின் இலக்கணம். (10)

11. அன்னமறியார் எடுப்பது ஐயமோ? அம்மானை

கலித்தாழிசை

நாரா யணனறியா நாதரரு ணேசருக்கு

வாரார் சிலைகலைமெய் மாதங்கம் அம்மானை! வாரார் சிலைகலைமெய் மாதங்கம் ஆமாயின் ஆராயுங் காலெடுப்ப தையமன்றோ அம்மானை! அன்னம்அறி யார்எடுப்ப தையமோ அம்மானை?

(பொ-ரை) திருமாலால் அறியப்பெறாத இறைவராம் அண்ணாமலையார்க்குக் கட்டமைந்த வில்லும் போர்வையும் உடலும் முறையே மேருமலையும், யானை உரியும், மாதொரு பாதியும் ஆகும் அம்மானை; கட்டமைந்த வில்லும் போர்வையும் உடலும் மாதங்கம் ஆனால், ஆராயும்போது அவர் எடுப்பது பிச்சையன்றோ அம்மானை; அன்னம் கண்டறியாதவர் ஆகிய அவர் எடுப்பதற்கு ஐயப்பாடோ அம்மானை.