உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம்-38

(வி-ரை) அம்மனை என்பது மகளிர் விளையாடும் ஒருவகை ஆடல். கழற்சிக் காயை அம்மனைக் காயாகக் கொண்டு பாடிக் கொண்டே விளையாடுவர்; மூன்று பேராக ஆடும் இவ் விளையாட்டில் முதலாமவள் ஒரு செய்தியை உரைப்பாள்; இரண்டாமவள் ஓர் ஐயத்தைக் கிளத்துவாள்; மூன்றாமவள் ஒரு முடிப்புக் கூறுவாள்; அவர் கூற்றுக்கு ஏற்ப இரண்டாமடி ஈறும், நான்காமடி ஈறும், ஐந்தாமடி ஈறும் 'அம்மானை' என்னும் முடிப்புப் பெற்றிருக்கும்.

'மாதங்கம்' என்னும் சொல் சிலை என்பதற்கு ஏற்பப் பெரிய தங்கம் (மேருமலை; பொன்மலை என்பதும் அது) என்றும், கலை என்பதற்கு ஏற்ப யானை என்றும் (யானைத் தோல் போர்த்தவர்), மெய் என்பதற்கு ஏற்ப மாது அங்கம் (உமை ஒரு பாகன்) என்றும் பொருள் தந்தது. 'ஐயம்' என்பதில் முன்னையது பிச்சை என்பதையும், பின்னையது ஐயப்பாடு என்பதையும் குறித்தது. அவ்வாறே 'அன்னம்' என்பது அன்னப் பறவையையும் சோற்றையும் குறித்தது. அன்னப் பறவை என்றது நான்முகனால் அறியப் பெறாமை சுட்டியது.(17)

12. வேந்தர் கருத்து என்ன? தோழி ஐயுற்று வினாதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

மானென்பார் கலையென் பார்கைம்மலை

யென்பார் வழியே தென்பார் ஏனென்பார் இலையென் பார்யான்

ஏந்துமாந் தழைநன் றென்பார்

ஊனென்பார் நிறையுந் தாரார்

உறையுந்தென் அருணை மானே!

கானென்பார் சூழலை வேந்தர்

கருத்தென்னோ கருதுங் காலே?

(பொ-ரை) தசையொடு கூடிய எலும்பும் ஆத்தியும் நிறைந்த மாலையை யணிந்த சிவபெருமான் கோயில்கொண்ட அழகிய அண்ணாமலையில் வாழும் மான் போன்றவளே. தலைமைவாய்ந்த இவர் 'மான்' என்பார்; 'கலைமான்' என்பார்; 'யானை' என்பார்; 'செல்லும் வழி ஏது' என்பார்; 'ஏன் என்றும்