உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

81

கேட்டு மறுமொழி தருவார் இல்லை' என்பார் 'யான் கைக் கொண்டிக்கும் மாந்தழை சிறந்தது' என்பார்; நின் கூந்தலை 'மணம் வாய்ந்தது' என்பார்; ஆராய்ந்து பார்ப்பின் இவர் எண்ணம் யாதாகும்? உரைப்பாயாக.

(வி-ரை.) இது தலைவியும் தோழியும் உடனிருந்தபோது தலைவன் தழை கொண்டு வந்து நின்று, "மான் முதலியன வந்தனவோ" என்று வினாவுதல் அறிந்த தோழி. "இவர் எண்ணம் யாதோ?' என்று தலைவியை வினாவியது.

கைமலை

-

கையையுடைய மலை. அஃதாவது யானை;

தழை தழையால் செய்த உடை; கான் - சோலை. (12)

13. அருணைப் பெருமாள் புயங்கள்

புயவகுப்பு

ஆசிரிய வண்ண விருத்தம்

கருணைமுக மண்டலத் தொளிர்மகர குண்டலக் கலன்மலிக வின்குழைக்(கு) உறவாய் இசைந்தன;

களபமகில் குங்குமத் தளறுகுடி கொண்டுதட் டியபுழுக ணைந்துமெய்ப் பனிநீர் துளைந்தன;

கலைமதிம ழுங்கிநத் தினம்இருள டைந்துமுத்

தொளிகருக வெண்சுதைத் திருநீ றணிந்தன;

கனலிகைய ரிந்துகட் பரிதியை முடினந்துதக்

கனைமுடித டிந்துமைத் தலையே வழங்கின;

இரணியனு ரங்கிழித் தளவறும தங்கொழித் தெழுநரம டங்கலைத் தடமார் பிடந்தன; இமயமட மங்கைபொற் புளகலிரு கொங்கையின் சுவடுபட இன்பமுற் றதிலே குழைந்தன; இரவிகிர ணங்கொழித் ததிசயமு டன்கிளைத் தெழுபவழ வன்பொருப் பெனவே வளர்ந்தன;

இதழியர விந்தமுற் பலமகிழ்செ ருந்திகட்

குரவலரி சண்பகத் தொடையான் நிறைந்தன;

தரியலர்பு ரங்கெடச் சுரர்நார்ப் யங்கெடத்

தமனியநெ டுஞ்சிலைச் சிலைலநாண் எறிந்தன;