உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம்

தனுவலத நஞ்செயற் கமர்பொருச ரந்தரச் சரகமென வந்துமற் பொருபோர் புரிந்தன; சலசமலர் மண்டபச் சதுமுகஅ யன்திருத்

-

தலையுடன்இ லங்குமுத் தலைவேல் உவந்தன; தடவிகட கும்பமத் தகதவள தந்தநற்

றறுகண்மத குஞ்சாத்துரி போர்வை கொண்டன;

அருணகிர ணங்களில் பலமணிநெ ருங்கிநச் சரவமிளிர் கங்கணப் பணியால் மலிந்தன; அனவரதம் அம்மலத் தினின்நடமி டுந்தொழிற்கு அபிநயவி தங்கள்பெற் றழகொ டிருந்தன; அருமறைதெ ரிந்தசொற் புகலியிறை செந்தமிழ்க் கரசினொடு சுந்தரப் பெருமாள் புகழ்ந்தன;

அரிபிரமர் தங்களுக் கரியதே பங்கயத்

தருணையதி ருங்கழற் பெருமாள் புயங்களே!

38ஓ

ரு

(பொ-ரை.) திருமால் நான்முகன் ஆகிய இரு கடவுளர் களுக்கும் காணுதற்கு அரிய திருவடித் தாமரைகளையுடைய, திருவருணைப்பதியில் கோயில் கொண்ட அதிருங் கழற் பெருமாள் ஆகிய அண்ணாமலையாரின் திருத்தோள்கள், (1) அருள் தங்கிய முகத்தில் விளங்குகின்ற சுறாமீன் வடிவில் செய்யப்பெற்ற குண்டலமாகிய அணிகலன் மிகுந்த அழகு செய்கின்ற காதுக்குப் பொருந்தியதாய் அமைந்தன;

(2) கலவைச் சாந்தையும், அகிற் குழம்பையும்,குங்குமக் குழம்பையும் அணிந்து அதன்மேல் பதன்படுத்தப்பெற்ற புனுகையும் அணிந்து தனது வடிவம் பனிநீரில் முழுகப் பெற்றன;

(3) கலைகளையுடைய திங்கள் ஒளி குறைந்து, சங்கினம் கருநிறம் அடைந்து, முத்தின் ஒளி குறை வெண்பொடியாகி திருநீற்றை அணிந்தன;

(4) தீக்கடவுளின் கையை வெட்டி, கண்ணாகிய கதிரோனைச் சினந்து, தக்கனது தலையைவெட்டி அவனுக்கு ஆட்டின் தலையை வழங்கின;

(5) இரணியனது

மார்பைக் கிழித்து, அளவற்ற செருக்கினால் மிகுந்து எழுந்த திருமாலாகிய நரசிங்கத்தின்

பெரிய மார்பைப் பிளந்தன.