உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வஞ்ச மனத்தான்

ஓர் அருமையான ஓவியக் காட்சி.

அக்காட்சியில் எண்ணற்ற ஓவியங்கள்.

எழுச்சி மிகு எழுத்துகள்.

உணர்வூட்டி உண்மை தெரிவிக்கும் தூண்டல்கள்.

அவற்றுள் ஒரு தனிக்காட்சி.

கண்டவர்கள் அனைவரையும் உள்நோக்க வைத்தது அது. அப்பகுதியில் கண்ணாடிப் பெட்டிகள் நான்கு.

மேலே மட்டும் திறப்பு; கண்ணாடி அமைப்பு.

மற்ற பக்கங்கள் எல்லாம் மறைப்பு

முதல் பெட்டியில் ஒரு தேனீ! பெரிதாகத் தீட்டப் பட்டிருந்தது.

படம்!

"இதற்குத் தலையில் நஞ்சு"

என்று எழுதப்பட்டிருந்தது.

அடுத்த பெட்டியில் ஒரு தேளின் ஓவியம்!

"இதற்குக் கொடுக்கிலே நஞ்சு

என்று எழுதப்பட்டிருந்தது.

மூன்றாம் பெட்டியில் படமெடுத்தாடும் ஒரு பாம்பின்

"இதற்குப் பல்லிலே நஞ்சு”

என்று எழுதப்பட்டிருந்தது.

இறுதிப் பெட்டிதான் அனைவரையும் திகைப்படையச் செய்தது!

அப்படம் ஒரு மாந்தனின் படம்.