உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

அதன் கீழே எழுதியிருந்தது,

"இவனுக்கு உடல் முழுவதும் நஞ்சு."

நஞ்சினும் நஞ்சு உறுப்பு நஞ்சு அன்று!

அந்நஞ்சு தற்காப்புக்காக அவை கொண்டது! ஆனால் மாந்தனின் நஞ்சு, நெஞ்ச நஞ்சு! உடலெல்லாம் பரவியுள்ள நஞ்சு!

91

தேடிப் போய்த் தீமை செய்யத் தேர்ந்த தீய நெஞ்சின் நஞ்சு தீராத நஞ்சு! தான் கொண்டது நஞ்சு என அவன் எண்ணு கிறானோ?

நஞ்சுடையவை இவை இவை எனத் தெளிந்து கொண்டு ஓடித் தேடி அழிக்கும் மாந்தன் தன் முழு நஞ்சைத் தான் உணர்கின்றானா?

அவனை மற்றவர்கள் மட்டுமா நகைக்கின்றனர்? அவனுள் இருக்கும்மண் விண் தீ நீர் காற்று என்னும் ஐம்பூதங்களும் நகைக்கின்றனவாம்!

இத்தகும் காட்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் உள்ளுள் கண்டாரோ?

என்னே கொடியன்! என்னே கொடியன்! என எண்ணி நின்றாரோ?

அதனால்,

“வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்"

என்றாரோ?

(271)