உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பொய்ம்மையும் வாய்மை இடத்த

"உனக்கு இந்த வீடா, நீ பிறந்த வீடா என்பது இன்றைக்குத் தெரிந்துவிடும்.

"எனக்குக் குறை இருந்தால் தானே"

"ஆமாம் உனக்குக் குறை இருந்தால். அடுத்த முழுத்தத் திலேயே அவனுக்கு வேறொரு தாலி கட்டு தான்! பிள்ளை தவழாமல் இன்னும் காத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது' மாமியார் சூடு மருமகளை வாட்டியது.

கணவன் தளர்ந்த முகத்தோடு வந்தான். "என்னங்க; மருத்துவர் என்ன சொன்னார் “அம்மா எங்கே?”

"வெளியே போயுள்ளார்!"

15

"நல்ல வேளை! அப்பாவாகும் தகுதி எனக்கு நன்றாக இருக்கிறது!அம்மாவாகும் தகுதிதான் உனக்கு இல்லை”

ஐயையோ! என் நிலை என்ன ஆவது? அம்மாவுக்குத் தெரிந்தால் என்னை என் வீட்டுக்கு முடுக்கி விடுவாரே?

'உன்னை விட்டுப் பிரிந்து என்னால் இருக்க முடியுமா? வேறு திருமணத்திற்கும் இடம் தருவேனா?'

"அம்மாவைத் தடுத்துப் பேசுவீர்களாக்கும் நீங்கள் என்ன சொன்னாலும் தலையாட்டத்தானே செய்வீர்கள்.”

உண்மை தான்! எதிர்த்துப் பேச முடியாது தான்! அதற்கு ஒரு வழி வைத்திருக்கிறேன்.”

வழியா? என்ன அது?"

அம்மாவினிடம் என்னிடம் தான் குறை; அவளிடம் குறை இல்லை என்பேன்; என்னை முடுக்கவா முடியும்!

66

'வாயை மூடிக்கொண்டிருப்பாள்"

எத்தகைய கணவர் இவர் எனப் பூரித்தாள்.