உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நில்லா தவற்றை

"உங்கள் உண்மை அழகைப் பாருங்கள்! பார்க்க விரும்பின் வாருங்கள்!”

என்னும் பலகை "வா வா" எனப் பலரையும் அழைத்தது;

அறிவியல் கண்காட்சிச் சாலை அது.

பிறந்த குழந்தையும் பெற்ற தாயும்!

தாய் மடியில் கிடக்கும் சேய்!

தவழும் குழந்தை!

எட்டு வைக்கும் பிள்ளை!

ஓடி ஆடும் ஆட்டம்!

பாடம் படிக்கும் பருவம்!

வளர்ந்த காளை!

திருமணக் காட்சி!

மக்களொடு தோன்றும் மகிழ்வு!

பதவிப் பொறுப்பும் வீறும்!

மூத்த முதுமை!

கட்டிலில் கிடக்கும் நோய்மை!

வ்வளவு காட்சிகளும் வண்ண வண்ண ஓவியங்கள்;

இறுதியில் ஒரு பெட்டி!

உங்கள் உண்மை அழகைப் பாருங்கள்" என்று எழுதப்

பட்ட பெட்டி அது.

மேல் பக்கம் மட்டும் கண்ணாடி;

முப்பக்கமும் மூடு மறைப்பு.

மேலே இருந்து பார்த்தால்! பார்த்தால்!