உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

- பார்ப்பவர் முகம் என்ன ஆகின்றது!

கண்கள் குத்திட்டு நிற்கின்றனவே!

ஏன் திகைக்கிறார்?

உள்ளே இருப்பது மண்டை ஓடு!

95

மண்டலம் எல்லாம் ஆட்டிப் படைத்தவனுக்கும் இறுதி நிலை இந்த மண்டை ஓடே!

எல்லாம் எரிந்தும் கரிந்தும் போக, எஞ்சி இருக்கும் மண்டை ஓடே!

எது மெய்? உன் வாழ்வு உரிய வகையில் வாழ்ந்து உயர்வுக்கு இடமானால், மீப் புகழாம் அது எச்சம்! புகழெச்சம்!

இல்லையேல்? இது என்ன எச்சம்? பழியெச்சம்! என்பதைச் சொல்லாமல் சொல்லும் மண்டை ஓடு.

இத்தகு அறிவியல் காட்சியை வள்ளுவக் கிழவர் உன்னிப்பாகக் கண்டு கொண்டாரோ?

மாந்தன் மாந்தனாக வாழா நிலையை எண்ணி எண்ணி இரங்கி நின்றாரோ?

அதனால்.

"நில்லா தவற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை

என்றாரோ?

(331)