உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஊழிற் பெருவலி யாவுள

சென்னையில் நேற்று காலையில் சரியாக 11.47 மணி இருக்கும். அப்போது வீடுகளில், பல மாடிக் கட்டங்களில் இருப்பவர்கள் நில அதிர்வை உணர்ந்தனர். மேசை நாற்காலிகள் அசைந்தன. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அச்ச முற்றனர். இது ஏதோ பெரிய அளவில் அழிவு தருமோ என்று பலரும் அஞ்சினர்.

பாரிமுனை கடற்கரைப் பகுதிகளில் உள்ள பல மாடிக் கட்டங்களில் இருந்தவர்கள் நில அதிர்வைத் தெளிவாக உணர முடிந்தது. அண்ணாசாலை இராயப்பேட்டை முதலிய பகுதி களிலும் பொதுவாக நில அதிர்ச்சியை உணர்ந்தனர். கிண்டி, மணலி முதலிய புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் இந்த அதிர்ச்சி புலப்பட்டது. வானிலை அலுவலகத்திற்குத் தொலை பேசியில் பேசிக் கேட்டனர்.

ஓரிரு தளம் உள்ள வீடுகளை விட பலமாடிக் கட்டடங் களில் இருந்தவர்களால் நில அதிர்வை எளிதில் உணர முடிந்தது. மேசையில் இருந்த கோப்புகள் சர் என்று சரிந்து அடுத்த நொடியில் அப்படியே நின்றதைப் பார்த்தனர். மாடிப்படிகளில் நின்றவர்கள் எளிதாகத் தடுக்கி விட்டது போல உணர்ந்தனர். பெரிய பொருள்கள் குலுங்கின. எழுதுகோல் (பேனா) கரிக்கோல் (பென்சில்) முதலிய சிறு பொருள்கள் நழுவி விழுந்ததைப் பார்த்துச் சிலர் அதிர்ந்தனர். மணலி பகுதியில் உள்ளவர்கள் தங்கள் வீட்டுப் பலகணி பட்டென அடித்துக் கொண்டதைக் கூறினர். சாலையில் போனவர்களுக்கு இந்த பட்டறிவு கிட்ட வில்லை. விரைந்து போய்க்கொண்டிருந்தால் இவர்களால் நில அதிர்வை உணர முடியவில்லை.

மாமல்லை வரை இந்த அதிர்வு காணப்பட்டது. மணலியைத் தாண்டிச் சில பகுதிகளில் அதிர்ச்சியால் மிகச்சிறிய விரிசல் கட்டடங்களில் ஏற்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.