உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வையகம் தழுவிய வாழ்வியல்

97

து மிக மெல்லிய நில அதிர்ச்சிதான் 5.2 ரிக்டர் அளவு கொண்டது. சென்னைக்குக் கிழக்கு வடகிழக்காக வங்கக் கடலில் 800 கி.மீ.தொலைவில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுதான் சென்னையில் எதிரொலித்தது. சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறை" என வானிலை அறிக்கை கூறுகிறது.

(தினமலர் 12-1-92)

சிறிய நில நடுக்கம் இது. 1961-ஆம் ஆண்டு மே மாதம் 21- ஆம் நாள் சிலி நாட்டில் ஒரு நில நடுக்கம் உண்டாயிற்று. அதன் விளைவு கண்டும் கேட்டும் இராத கொடுமையாயிற்று.

சிலி நாட்டின் நடுமையத்தில் உள்ள 'கன்ஸெப்ஷன்' என்னும் நகரமும் அதையடுத்த பகுதிகளும் கொடிய பூகம்பத்துக்கு உள்ளாயின. அப்போது அங்குள்ள வீடுகள் கிடுகிடுத்து ஆடி விழுந்தன.பாலங்கள் உடைந்து தகர்ந்து போயின. பல இடங்களில் தீப்பற்றிக் கொண்டது. வானம் கீறியது போல் பெருவெள்ளமாக மழை பொழிந்தது; அந்நகருக்கு 25 மைல் தெற்காக உள் ‘காரனல்' என்னும் சுரங்கப்பட்டணத்தில் உன்ன வீடுகளில் பாதி தகர்ந்து விழுந்தன. இன்னும் பல வெடித்துப் போயின. அயலில் உள்ள 'கிலோ வேக்' தீவிலும் 'லாங்கிவே' 'காஸ்டிரோ' முதலிய இடங்களிலும் பூகம்பத்தால் மிகுந்த சேதம் உண்டாயிற்று.

66

'கன்ஸெப்சன் நகரத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். ஒருவரும் எதிர்பாரா நிலையில் திடீரென்று இந்தப் பேராபத்து அவர்களைத் தாக்கியது அவர்களில் பலர் துரதிஷ்டம் வாய்ந்த அந்த நகரை விட்டு வெளியேறிக் காடுகளையும் வயல்களையும் அடைந்து அப்பாற் சென்று உயிர் தப்ப முயன்றார்கள்.

"வீடுகளும் கட்டடங்களும் நொறுங்கி விழுந்த போது அவற்றில் பலர் அகப்பட்டுக் கொண்டு மாண்டார்கள். உடைந்து விழும் பாலங்களில் இருந்து ஆற்றில் தள்ளப்பட்டுப் பலர் உயிர் இழந்தார்கள். அவர்கள் செல்லும் பாதைகள் பல கீறியும் வெடித்தும் வாய் பிளந்தும் வழி மறித்தன. பூகம்பத்தால் இடிந்து விழும் கட்டடங்களின் பேரோசையும் இங்கும் அங்கும் பற்றி வானை நோக்கி எழும் தீயின் செந்நாவும் அவர்களை அச்சுறுத்தி வெருட்டின. ஆகாயவிமானங்கள் வானில் ஏறிப் பறக்க முடிய வில்லை. அதனாலும் தந்திக் கம்பிகள் டெலிபோன் கம்பிகள்