உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

99

பல்லாயிரக்கணக்கான குடிசைகளும், வீடுகளும் அழிந்து போயின நியூஜிலாந்து, ஆஸ்திரேலியா, பார்மோஸா, ஹாவாய் முதலிய தீவுகளின் கிழக்குக் கரைகளிலும் தென்கிழக்குப் பகுதி களிலும் மிகுந்த உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் உண்டாயின. சிலி நாட்டில் முதலில் தோன்றிய பூகம்பத்தைத் தொடர்ந்து சில நாள்கள் வரை பூமி சிறிதோ பெரிதோ ஆடி வந்தது. அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள பிலிப்பீன் ஒன்றாகிய மணிலாத்தீவும் தெற்கே உள்ள நியூஜிலாந்து தீவின் சிற்சில பகுதிகளும் ஆடி அசைந்தன. சிலி நாட்டில் உள்ள எரிமலைகள் நெருப்பு, புகை, கரி முதலிய வற்றைக் கக்கத் தொடங்கின. அவற்றுள் ஒன்றாகிய யூயேயேவ என்னும் எரிமலை அவற்றை 7000 மீட்டர் உயரம் வானத்தில் வீசிற்று. அங்குள்ள எரிமலைகள் எல்லாமே விழித்தெழுந்தன, நெருப்பை உமிழ்ந்தன."

தீவுகளில்

இது அறிஞர் பெ.நா. அப்புசாமி அவர்கள் கலைக்கதிர் பொங்கல் மலரில் (1962) எழுதிய ஆழிப் பேரலைச் செய்தி.

அறிவியல் வளர்ந்த இந்நாளிலேயே இயற்கையில் சீற்றத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை! ஓடிப்போய் உதவ முடியவில்லை! ஓடித்தப்ப முடியவில்லை! மேலே பறந்தும் பார்க்க முடியவில்லை. 70000 சதுரக்கல் பரப்பு நிலம் பாழாயிற்று! எண்ணத் தொலையா இழப்புகள்! நாடு நாடாக அழிபாடுகள்!

வை,

CC

“பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்ட" (சிலம்பு)

கொடுமையை உலகறியக் காட்ட வல்லனவாம்!

இத்தகும் இயற்கை எழுச்சியை வள்ளுவக் கிழவர் கண்டாரோ! “என்னே இயற்கை! என்னே இயற்கை; ஆக்கமும் கேடும் ஆக்கும் இயற்கை" என்று நினைத்தாரோ?

அதனால்,

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்" (380)

என்றாரோ?