உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்.

12. யாதானும் நாடாமல்

ஒரு புத்தக அங்காடியில் வேலை; நூல் விற்பனையாளர்

வேலைக்கும் ஒரு நாள் ஓய்வு வந்தது. அவருளம் நினைத்தது; "வேலை இல்லாப் பொழுது என்ன, வெட்டிப் பொழுது!' "வாழும் விருப்பினர், வெட்டிப் பொழுதை விரும்பக் கூடுமோ?”

படித்த படிப்பைப் பட்டப் படிப்பு ஆக்க எண்ணினார்; எண்ணியபடியே எழுச்சியாய்ப் படிப்பில் இறங்கினர். இளங்கலை உயர்நிலை (B.A. ஆனர்சு) படிக்க விரும்பி அஞ்சல் வழியில் தொடர்ந்தார்.

விரும்பிய பட்டம் விரும்பியவாறே பெற்றார்.

அப்பொழுது அவர்தம் அகவை 75.

அடுத்தும் படிக்கத் தொடுத்தார். அதே அஞ்சல் வழியே வழியாய் மெய்யியல் (எம்.பில்) கற்றார்.

அப்பொழுது அவர்தம் அகவை 83

பல்லும் போகி, சொல்லும் போகி, முதுகும் கூனி முட்டி தட்டும் பொழுதில், 'இளமையில் கல்" என்பது போலவா படித்தார்?

வேலை நோக்கியோ - வருவாய் கருதியோ பயின்றார்.

பயின்ற பாட்டியின் பெயர் திருமதி ஆலீவு இரசல். இங்கிலாந்து நாட்டு காரோ என்னும் ஊரினர்.

கிளாசுக்கோ பல்கலைக் கழக மாணவியர் அவர்.

ஆயிரம் பிறை கண்டு கடந்த பின்னரும் கல்வியார்வம் குன்றா இவரைப் போலும் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?