உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தினைத்துணையாம் குற்றம்

வெரியர் எல்லின் என்பார் கிறித்தவத்துறவர் பயிற்சியர். அவர் வட்டம் சமயங் கடந்ததாக விரிந்தது. உலகப் பார்வை அவர் பார்வை யாயிற்று.

உயிர் நேயப் பார்வை அவர் பார்வை யாயிற்று.

மாந்த இயல் கல்வியில் மாப்பேரறிஞராகவும் விளங்கினார். இங்கிலாந்து மண்ணவர் அவர்.

இந்திய மண்ணில் தம் பணியை ஊன்றினார்.

ஊன்றிய அவர்க்கு, உரிமை வேட்கையர் காந்தியடிகளின் தொண்டு உவகையாயிற்று.

அத்தொண்டிலேயும் ஆட்படுத்திக் கொண்டர்.

சமயச் சால்பு - தொண்டின் ஊற்றம் -எழுந்து ஆற்றல் உலக நேயம் எல்லாம் கூடிய ஓர் உருவராக எல்வின் விளங்கினார்.

அவர்தம் கல்விக்கால இளந்தைப் பருவத்தில் தாம் அவ்வப்போது செய்த குற்றங்களைப் பங்குத் தந்தை முன்னே ஒளிவு மறைவு இன்றிக் கூறிப் 'பொறுத்துக் கொள்ள வேண்டும். என்னும் மன்றாட்டு நிகழ்ச்சியின்போது, நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று:

ஒவ்வொரு வாரமும் அவ்வாரப் பிழைகளைக் கூறிப்

பொறுத்துதவ வேண்டும் வேண்டுகையில் ஒரு வாரத்தில் அன்று - பல வாரங்களில் எண்ணிப் பார்த்தார். பிழையென ஒன்று செய்ததாகத் தோன்றிற்றில்லை. ஒரு கிழமை மின்வெட்டென ஒரு குறை தோன்றிற்று. அது என்றோ தாம் இலண்டன் வீதியில் செய்த பெரும் பிழைச் செயல் என்னும் ஒன்றேயாம். அவ்வொரு பிழையும் தான் என்னவாம்? தெரு வழியாக நடக்கும்போது அடக்க முடியாமல் எழுந்துவிட்ட மூக்கைத் தெருவில் சிந்தி விட்டதாகுமாம். இந்த மண்ணிலே எவருக்கேனும் தெருவில்