உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம் - 398

மூக்கைச் சிந்திய இது செய்யத்தகாக் குற்றமெனத் தோன்றவும் தோற்றுமோ? தோற்றியதாமே எல்வினுக்கு!

தோற்றியதால்தானே அதனைப் பொறுத்துவத் திருத்தந்தை வழியே தெய்வத் தந்தைக்கு வேண்டுகை விடுத்தார். எல்வின் போலும் சால்பரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

‘என்னே சால்பு! என்னே சால்பு!' என வியந்து நின்றாரோ?

அதனால்,

"தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்”

என்றாரோ?

(433)