உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. தேரான் தெளிவும்

நாடாளுமன்ற அவைத்தலைவர் உக்கும் சிங்.

அவர் பதவியேற்ற பின் பணம் சேர்த்து விட்டார் என்று நாளிதழ் ஒன்று குற்றம் சாற்றியது.

அது பற்றி வினா எழுந்தது நாடாளுமன்றத்தில்.

அவைத் தலைவர் என்ன சொன்னார்.

தட்டிக் கழித்தாரா? குறை கூறியது தவறு என்றாரா?

இதழ் காட்டிய குற்றம் பற்றியோ அவையில் எடுத்துக் கூறியது பற்றியோ மனத்தாங்கல் கொண்டார் அல்லர்! மாறாக, குற்றத் தொடர்பான எல்லா விளக்கங்களையும் நாடாளு மன்றத்தின் முன் வைக்கப் போவதாகவும் அவையின் உறுப் பினர்கள் தீர்ப்புக்கு விட்டு விடப் போவதாகவும் தெளிவாக உரைத்தார்.

குறை மெய்யானது அன்று; அதனை நாங்கள் அறிவோம்" என உறுப்பினர்கள் பலர் அப்பொழுதேயே உரைத்தனர். “அவைத் தலைவரை மாசு கற்பிப்பது நாட்டுக்கே மாசு கற்பிப்பது மேற்கொண்டு ஆய்வு நடத்த வேண்டியது இல்லை" என்று தலைமையமைச்சர் இலால் பகதூர் சாத்திரியார் கூறினார். "அவைத் தலைவர் பதவி நாட்டின் தலைவர் பதவிக்கு ணையானது. பொய்க் குற்றச்சாற்றை உதறித் தள்ளுதலே முறை' என்றார் லோகியா.

"இக்குற்றச் சாற்றுக்குச் சற்றேனும் மதிப்புத் தருதல் ஆகாது.தந்தால் இம்மாதிரிக் குற்றச் சாற்றுகளை வெளியிடவும் பரப்பவும் ஊக்கப்படுத்தியதாகிவிடும்" என்றார் பகத்துசா.

இவற்றால் எல்லாம் உக்கும் சிங்கை அசைத்துவிட முடிய வில்லை. கொள்கை வீரராக நின்றார்.

"குறை கூறியிருப்பவர் எவர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்; குறை கூறியிருப்பவர் தகவற்றவராக இருந்தால் அவர் கூறிய குறையைப் பொருட்படுத்தாமல் ஒதுக்கி விட வேண்டும்.