உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம் - 39 39 ✪

மரக் கூழ்க் கருவியில் ஒட்டிய தசையும், தெளிக்கப்பட்டு மண்ணில் கிடந்த தசையும் ஒன்றாய் இருந்தன.

விரல் நகப் பூச்சும் இறந்து போனவள் வீட்டில் இருந்த நகப் பூச்சும் ஒன்றாய் இருந்தன.

மண்ணில் கிடைத்த தலைமுடியும் வீட்டில் இருந்த சீப்பில் ஒட்டியிருந்த தலைமுடியும் ஒப்பாய் இருந்தன.

மரக் கூழ்ப் பொறியை வாங்கிய சீட்டில், இறந்தவள் கணவன் பெயர் இருந்தது!

கணவனே கொலைஞன் என்று மெய்ப்பிக்கப்பட்டது. கொன்றவன் ரிச்சர்டு கிராப்ட்

கொல்லப்பட்டவள் கெல்லி.

கொலையைக் கண்டுபிடித்தவர் லீ.

அமெரிக்கக் ‘கனெக்டிகட்டு' மாநிலத் தடயவியல் இயக்குநர். எத்தகைய திட்டமிட்ட கொலை.

எத்தகைய திட்டமிட்ட தடய அழிப்பு!

இவற்றையும் வெற்றியாகக் கண்டு மெய்ப்பித்தது ஒற்று! இத்தகும் ஒற்றில்லை யானால், மரக் கூழ்ப் பொறியெலாம் மாந்தக்கூழ்ப் பொறியாகி விடுமே!

முறைமையைக் காக்க இத்தகைய முழுதுறும் ஒற்று இன்றி

முடியுமா?

முற்ற முடிந்த மறைப்பையும் காணவல்ல

இத்தகும் ஒற்றரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? இவர் திறம் என்னே என்னே என்று வியந்து நின்றாரோ? அதனால்,

66

"ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்.

என்றாரோ?

""

(581)

செய்தி : தினமணி 12-3-92.