உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பழுதெண்ணும் மந்திரி

சப்பானியத் தலைமையமைச்சர் மியாசவாவின்.

அவருக்கு நண்பர் முன்னாள் அமைச்சர் பியூமியோ அபி.

அரசின் கமுக்கத் திட்டம் ஒன்று

புதிதாக உருவாக்க இருந்த விரைவு வழித்தடத் திட்டம்.

அதனைப் பியூமியோ இரும்புக் குழுமம் ஒன்றற்கு மறைமுகமாக வெளியிட்டுதவினார்.

இரும்புக் குழுமம் இதற்குத் தந்த கையூட்டோ ஆறு இலக்கத்து நாற்பது ஆயிரம் அமெரிக்கத் தாலர்.

இரும்புக் குழுமத்திற்குப் பலப்பல ஒப்பந்தங்களைக் குறுக்கு வழியில் தந்து விடவும் திட்டம்!

பியூமியோ திட்டம் ஊழல் ஆய்வுத் துறைக்குக் காற்றாய் அடித்தது. விளைவு?

பியூமியோ சிறைப்படுத்தப்பட்டார்.

நண்பரும் தலைமையமைச்சருமான மியாச வாவுக்கும் தொடர்பு உண்டோ? என்ற ஐயம் எழுமா இல்லையா?

நன்றாய் எழுந்துவிட்டது.

சான்றெதுவும் இல்லை எனினும் குற்றம் சார்ந்து கொள்ள

நிற்கிறது.

து

அமைச்சு நண்பர் பழுதுத்திட்டம் தலைமைக்குத் தலைக்குனிவு மட்டுமா? தேர்தலில் வீழ்ச்சியும் தழுவ நேருமாம்!

இக்கட்டில் பட்டு இனைகிறார் தலைமையமைச்சர்!

இத்தகு காட்சியை வள்ளுவர்கிழவர் அந்நாள் நிலையில் கண்டாரோ?