உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பேராண்மை என்பதறுகண்

இத்தாலியருக்கும் அபிசீனியருக்கும் கடும் போர்!

களத்திலே தோல்வி அபிசீனியருக்கு.

தப்பியோடும் நிலை அபிசீனியருக்கு

விடாமல் வெருட்டித் தாக்கும் வாய்ப்பு இத்தாலியருக்கு.

ஓட ஓட வெருட்டல்

ஒதுங்க வாய்ப்பான இடம்!

அபிசீனியர் மறைதற்குச் சென்றனர்,

ஆனால் அங்கே ஒரு பெண் நின்றாள்.

அவள் கூறிவிட்டால்?

ஒருவன் சென்றான், "நீ எங்களைத் துரத்தி வரும் இத்தாலியருக்கு எங்களைக் காட்டித் தந்து விடாதே. காட்டித் தந்தால் நம் நாட்டுக்கே கேடு தான்" என்றான்.

ஒதுங்கி மறைந்து கொண்டனர்.

அவளோர் அபிசீனியப் பெண்; நாட்டுக்காகத் தன் பெற்றோர் உற்றோர் உறவெல்லாம் பறி கொடுத்து நின்றவள். வயது பதினெட்டு.

அவளை இத்தாலியப் படை கண்டது; வளைத்தது "அபிசீனியப் படையைக் கண்டாயா?"

"இல்லவே இல்லை"

66

'உண்மையைக் கூறு; இல்லையேல் உயிரை இழப்பாய்

"அபிசீனியப் படை வந்தால் அல்லவா சொல்வதற்கு? வந்திருந்தால் என்ன வந்தது சொல்வதற்கு?”

"வாயால் கேட்டால் சொல்ல மாட்டாய்; கொடுப்பதைக் கொடுத்தால் கூறுவாய்; உயிரோடு இருக்க எண்ணினால் உண்மையைக் கூறு.