உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

"எவரையும் பார்க்கவில்லை”

அடித்து வருவிக்க ஏவினான் தலைவன்!

அடித்து அடித்துக் கேட்டனர்;

துடித்துப் போகவில்லை அவள்!

அடித்தவரே துடித்துப் போயினர்!

117

இடுப்பில் இருந்த கத்தியை நறுக்கென எடுத்தாள் அவள்! தன் நாவை நீட்டிக், கத்தியால் நறுக்கென அறுத்துப் போட்டாள். ஏன் அறுத்தாள்?

"அடியைத் தாங்கா நிலையில் தன்னை மறந்து நாக்கு ஏதாவது உழறி விட்டால்? நாக்கே இல்லை என்றால் நானே நினைப்பினும் சொல்ல முடியாதே!'

எண்ணியவாறு செயல் பட்டாள்

-

சுற்றி நின்றவர்

எண்ணம் ஒழியச் செயல்பட்டாள்.

பொறுப்பனா தலைவன்?

'நாவை அறுத்துக் கொண்டதே, இவள் படையைக் கண்டதை மெய்யாக்கி விட்டது! என்னிடம் செய்தியை வாங்கவா பார்க்கிறாய்? பார்" என்று செய்து விட்டாள்!

உயிரோடு விடாதீர்கள்" என்றான்! அவன் சொல்லை முடிக்கு முன் செய்து முடித்தனர் படைஞர்.

கோழைப்பயல்கள் வீரத்திற்குத் தலை வணங்க வேண்டிய

டத்திலே,

தன்னை அழித்துக் கொண்டும் தன்னாட்டு வீரரையும் நாட்டையும் காக்க வேண்டும் என்னும் நாட்டுப்பற்றைக் கண்ட அளவிலே, அவள் துணிவைக் கண்டு அவளைப் பெருமைப் படுத்தியிருக்க வேண்டும்! அது வீரம்! ஆண்மையில் ஆண்மை! களப்போரிலே வந்த கடும்பகை எனினும் அவன் தன்னால் தாக்குண்டு வீழ்ந்து விட்டால், அவன் மேல் காட்டும் இரக்கம் - அவன் வீரத்தின் மேல் கொண்ட மதிப்பு மிகுந்து செல்ல வேண்டும்.

-

இயலா நிலைக்குப் போன பின்னரும், எதிரியை எதிரியாகக் கருதும் எவனும் வீரன் அல்லன்; கோழை! கோழையிற் கோழை!