உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒருமைச் செயலாற்றும்

அடுத்தும் அடுத்தும் இரண்டு வீடுகள்.

நாயைக் கொண்டும் பூனையைக் கொண்டும் நாயும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொள்வர்.

ஆண்கள் மட்டுமா? பெண்களும் கூடவே.

ஒருவர் வீட்டில் கிடந்த நாளிதழ் ஒன்று ஈரமாய் இருந்தது. ஈரம் என்றால் எத்தனையோ வழிகளால் ஏற்பட்டிருக்கக் கூடுமே!

எண்ணிப் பார்த்தார் அல்லர்.

அடுத்த வீட்டு நாய் தான் நீரைப் பெய்து ஈரமாக்கிய தென்று முடிவு செய்தார்.

அவர்தம் மனைவி அந்தத் தாளை அடுத்த வீட்டார் மகிழ்வுந்துக் குள்ளே வீசி எறிந்தார்.

அதனை எடுத்து வீசி எறிந்தார் எறிந்தவர் மேலே! மீளவும் எடுத்து எறிந்தவர் மேலே, மேலும் எறிந்தார்.

மாறி மாறி இப்பணி முடித்து வீட்டுள் புகுந்தார் குற்றம் சாற்றப் பெற்ற நாயின் உரிமையர்.

மனைவியோடும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். குற்றம் சாற்றியவர் கையில் துமிக்கியோடு புகுந்தார். மனைவியோடு பேசிக் கொண்டிருந்தவர் மார்பை நோக்கிச்

சுட்டார்.

அந்த நொடியிலேயே அவர் மாண்டார்!

சுட்டவர் மைக்கேல்.

சுடுபட்டு இறந்தவர் மார்ட்டின்!

காவல் துறையால் சிறைப்படுத்தப்பட்டார் மைக்கேல்.