உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள் பழித்தன; அரசியலாளர் ஒழித்துக் கட்ட முனைந்தனர்; குடியரும் வறியரும் தாமா கைகொடுத்து உதவ முன் வருவர்?

எடுத்த உறுதியை முடித்தே தீருவேன் என உறுதி கொண்ட சாரிங்டன், 'ஓசியா' என்னும் ஒரு தீவையே விலைக்கு வாங்கினார்! மதுவால் வந்த காசு மதுவிலக்குக்கு ஆயிற்று அதனை, "மது விலக்குத் தீவு” எனத் திட்டப்படுத்தினார்.

இங்கிலாந்து தேயத்திலே முழு மது விலக்குப் பகுதி அத்தீவே என்பதை உறுதி செய்தார்.

மதுவில் நீந்தியவர்களும் கூட, அதனை முற்றிலும் நீங்கி வாழும் பண்பாட்டு மையமாக ஓசியா விளங்குவதாயிற்று! தன் வயிற்றில் இருந்து பெற்றவளும், கணவனாகப் பெற்றவளும், தந்தை இவனெனப் பெற்றவர்களும் ஆகியவர்களாலும் வெறுக்கப்படும் மதுக்குடியைச், சால்பால் நிறைந்த சாரிங்டன் போல்வாரும் இருப்பரோ? அவர் கொண்ட மது வெறுப்பே ஓசியாத் தீவாக - மதுவிலக்குக் கோட்டையாக உருக்கொண்டது!

இத்தகு சான்றோர் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே சால்பு! என்னே சால்பு! என வியந்து நின்றாரோ! அதனால்

"உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரால் எண்ணப் படவேண்டா தார்"

என்றாரோ?

(922)

ஓம் சக்தி - தீபாவளி மலர் நவம். 1991. கட்டுரை : இராசாசி