உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

தாம் செய்யும் தொண்டுணர்வுக்கும், தம் தந்தையார் வாணிகத்திற்கும் உள்ள இடைவெளி பளிச்சிட்டது!

தந்தையாரின் வாணிகத்தில் ஈடுபடவோ, அவர் ஈட்டிய பொருளை வைத்துக் கொள்ளவோ. அவரோடு உடன் இருக்கவோ ஒப்பாராய் ஒதுங்கினார்.

-

செல்வம் சிறிதா?

பதினெட்டுக் கோடி உருபா மதிப்பாம் அந்த நாளில்! தந்தை மன்றாடினார்!

தம் முடிபு தக்க முடிபு என்றும், அதில் மாறப் போவது இல்லை என்றும் உறுதி கொண்டார் மைந்தர்.

மதுவிலக்கைப் பற்றியே தம் தொண்டை ஆக்கிக்

கொண்டார்.

"பீரைக் குடித்து விட்டு அவன் தன் மனைவியை உதைத்துத் தள்ளியதே, என்னை என் தந்தையார் செல்வத்தில் இருந்தும், தொழிலில் இருந்தும் வீட்டில் இருந்தும் உதைத்துத் தள்ளிய தள்ளலாயிற்று" என்று எழுதினார்.

எளியோர் குடிசைப் பகுதியில் ஒரு குடிசைத் தம் வாழ்விட மாக்கிக் கொண்டு மது விலக்குத் தொண்டில் அழுந்தினார். அகவை செல்லச் செல்லத் தந்தைக்கு, மகனின் செயல் மாண்பு புலப்பட்டது.

மகனுக்கு உதவவும் முன் வந்தார்.

"என் செயல் அழிபாட்டுச் செயல்; நின்செயல் அழியாப் பெருஞ்செயல்”என ஒத்துக் கொண்டார்.

அவர் ஒத்துக்கொண்ட கால நிலை. உயிர்ப் போராட்டக் காலநிலை!

மைந்தர் போராட்டமோ அரசியல் சட்டத்தி மாற்றிய மைக்கும் போராட்டமாகக் கிளர்ந்தது.

மதுவால் வெறியும் மயக்கும் செல்வமும் கொண்டவர்கள் எளிதில் விடுவரா?

சாரிங்டனைச் சொல்லால் தாக்கினர்; கல்லால் தாக்கினர்; கழியால் தாக்கி வீழ்த்தினர்; குருதி சொட்டச் சொட்ட வாட்டினர்! எனினும் உறுதி தளர்ந்தார் இலர்!