உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அற்றார்க்கு ஒன்று

அவர்க்கு மக்கள் மூவர்.

அவர் நல்ல உழைப்பாளர்.

ஆனால் குடியர் ஆகிவிட்டார்.

உழைத்த காசெல்லாம் குடிக்கே ஆயது.

குடும்பத் தீனுக்கு உதவியது தாயின் உழைப்பு வழியால் வந்த சிறிய தொகை.

குடிகாரர் படுத்தும் பாட்டையும் குடும்பச் சுமையையும் எதிர்காலங் கருதித் தாங்கிக் கொண்டார்.

மக்கள் மூவருள் இருவர் ஆண்கள்; டையே பிறந்த தொன்றே பெண்.

மூத்தவன் ஓரளவு படித்தான்; குடும்ப நிலையறிந்து வேலைக்குச் சென்றான்.

அடுத்தவள் படித்தாள்; ஆசிரியப் பயிற்சி பெற்றாள். அந்த இருவரினும் இளையான் கூர்ப்பன்.

நன்றாகப் படித்தான். மேனிலை வகுப்பில் உயரிய

மதிப்பெண் எய்தினான்.

மருத்துவப் படிப்புக்கு முயன்றான்.

தேர்வு எழுதினான்; வெற்றியும் பெற்றான்.

கல்லூரியில் சேர ஆணையும் எய்திற்று.

ஈராயிரம்போல் கட்ட வேண்டும்!

வெறுங்கையன் என்ன செய்வான்?

அற்றை வேலையால் குடும்பம் ஓட்டும் அன்னைதான் என்ன செய்வார்!

பத்து நூறா? ஈராயிரம் ஆயிற்றே! மேலும் திங்கள் தோறும் ஐந்தாண்டளவுக்குத் தொகை வேண்டுமே!