உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

-

இளங்குமரனார் தமிழ்வளம் 39

தொண்டில் பழுத்த தூயர் ஒருவரை நாடினார் தாயார்! அவரோ ஓய்வு ஊதியத் தொகை முழுவதும் உதவிக்கே செலவளிக்கும் செம்மல்!

தொகையும் பற்றுமோ, இரு நூறு பெறும் ஓய்வு ஊதியர்க்கு! தக்கார் ஒருவரை வழக்கமாக நாடுவார், தம் தகுதிக்கு மிஞ்சிய கொடையென்றால்!

அப்படி நாடினார்.

அவரோ சொன்னார்; இலக்கம் இலக்கமாகக் கையூட்டுத் தந்தும் கணக்கில் தந்தும் மருத்துவக் கல்விக்கு இடம் கிடையாமல் எத்தனை எத்தனைபேரோ, தவிக்க, தன் திறத்தாலே தானே பெற்ற இடத்தைத் தக்க வைத்துக கொள்ளவும் தவிப்பா?

படிக்க இடம் வாய்த்தும் அதனை ஒருவர் இழப்பாராயின் குடிக்குமட்டுமோ கேடு; நாட்டுக்கேடே யன்றோ!

ஈராயிரமும் உடனே தருவேன்; கல்லூரியில் சேர்க; திங்கள் செலவுக்கு வங்கிக் கடனை ஏற்பாடு செய்யலாம்' என்றார்.

தாயோ கண்ணில் காணாத் தெய்வம் கண்ணேர் வந்து கையில் இடியெனக் கருவூலம் வழங்கிய தென்னக் களித்தார்.

கூர்த்த மாணவன் காலத்து வாய்த்த கார் மழை போன்ற உதவியால் தளிர்த்தான்.

அந்தப் பெருந்தகை வள்ளுவர் மன்றத் தலைவர். வள்ளலார் இல்ல நிறுவனர், உழைப்புத் தோன்றல் திருவல்லிப்புத்தூர் வாழ் ம.பொன்னையா!

என்ன பேறெலாம் பெற்றேன்; பெறுகிறேன்.

வறிய யானோ, வளமையனாக உள்ளேன்.

வறுமைப்பாட்டை அறிந்தவன் அதனைப் போக்கல்

கடனெனக் கொண்டேன்.

வள்ளுவத்தை நான் பற்றினேன் அல்லேன்;

வள்ளுவம் என்னைப் பற்றிக் கொண்டது.

அதனை அறிமுகம் எனக்குச் செய்தவர் பெரும் புலவர்

கூர்மாவதாரர்.