உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. சொல்லப் பயன்படுவர்

சென்னை கிண்டியை அடுத்த மேலைச்சேரி. ஆங்கொரு கிறித்தவப் பள்ளி.

அப்பள்ளியை அடுத்தொரு மகளிர் விடுதி. பள்ளி ஆசிரியை பாக்கியம் என்பார்.

அவரே விடுதிப் பொறுப்பும் உடையார். விடுதியில் வறிய குழந்தையர்;

பெற்றோர் இருக்கும் பேறு அற்றவர்; பெண்டிரும் வறியர்; முதியவர்; கைம்மையர்.

எளிய விடுதியில் என்ன இருக்கும்?

அரிதின் முயன்று அன்றன்று உணவுக்கு வேண்டும் அரிசியும் பருப்பும் காய் கறிகளும் போதும் போதாதென்னும் நிலையில் இருக்கும்.

இரக்கத் தொண்டால் எளிமையில் இயலும் இந்த விடுதிக்கும் ஓர் இடையூறு.

ஊரின் உதவியாலும் உண்மை இரக்கத்தாலும் ஏதோ இயன்று இந்த விடுதியின் பொருள்கள் திருடப்பட்டன. ஒரு நாள் இரு நாள் இல்லை; பல நாள்!

அரை வயிறும் குறை வயிறும் உண்டவர்களுக்கும் பசியும், பட்டுணியும் ஆயின.

வலிய திருடரைத் தடுக்கும் வலிமை எவருக்கும் உண்டு? இளகிய இரக்கப் பிறப்பாம் ஆசிரியை பாக்கியத்திற்குக்

கூடுமா?

பல நாள் பார்த்தார்! கண்ணுறங்காமல் திருடர் வரவை நோக்கியிருந்தார்.

வழக்கம் போலத் திருடர் வந்தனர்.

பண்டங்களை எடுத்து வெளியே வைத்தனர்.

அம்மையார் அவர்கள் காதில் விழும்படி கூறினார்;