உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

137

என்றே மகிழ்நனார் ஆய்ந்து மணத்தைப் பற்றி எழுதினார். (செந்தமிழ்ச் செல்வி 5 : 223-4) இத்தகும் ஆய்வின் ஓட்டம் உள்ளிருந்து ஊற்றாய்க் கிளர வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

அதனை என்னே! என்னே! என வியந்து நின்றாரோ?

அதனால்,

"கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள்

என்றாரோ?

(1101)