உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவக் கிழவர் கண்டாரோ!

1.

உக்குச் சென்றான் ஒருவன்; சிறுவன்.

சென்ற வழியில் சண்டை;

இரு பெருங்கும்பல், அடி - தடி -முட்டல்-மோதல் - குத்தல்

கொலை!

காவல் படை கடிதில் வந்தது.

கண்ணீர்ப்புகை, துமுக்கிச் சூடு (துமுக்கி -துப்பாக்கி)

வேடிக்கை போலப் பார்த்தான் சிறுவன்!

விளக்கின் ஒளியில் மயங்கிய விட்டில் ஆனான்.

வாங்கப் போன பொருளை வாங்கு முன்.

காவலர் துமுக்கிக் குண்டை வாங்கினான்!

சீறிப் பாய்ந்து சிதறி வந்து தெறித்த குண்டு சிறுவன் மார்பைத் துளைத்து, நுரையீரற் குழே இறங்கி, வயிற்று மேற் கூட்டை (உதரவிதானம்)க் கிழித்து, முதுகு வழியே வெளியே போனது! குண்டு போனால் என்ன ஆகும்?

குருதி எல்லாம் கொட்டு கொட்டெனக் கொட்டிப் போனது! உயிர் தங்க வேண்டும் என்றால், அறுவை செய்ய வேண்டும்.

அறுவை செய்ய வேண்டும் என்றால், ஆரூயிர்க் குருதி வேண்டும்!

அக்குருதிதானும் அவன்றன் இனத்தொடும்

வேண்டும்!

யைய

சிறுவன் செய்தி அறிந்த சிறிது பொழுதில், உருகும்

உளங்கள் ஓடி வந்தன!