உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

உயிர்க்கு உறுதியாம் குருதியை உவந்து வழங்கின!

குலமும் இல்லை; குடியும் இல்லை;

சாதியும் இல்லை; சமயமும் இல்லை;

139

மொழியும் இல்லை; எதுவும் இல்லை -

இருந்ததெல்லாம் ஒரோ ஓர் இரக்கம் - உருக்கம்!

ஆறு புட்டி ஏற்றப்பட்டது!

அறுவை நன்றாய்ச் செய்யவும் பட்டது!

போகும் உயிரை நிறுத்தவும் பட்டது!

அழிவில் மோதிய கூட்டமும் மாந்தரே!

ஆருயிர் தரற்கு மோதிய கூட்டமும் மாந்தரே!

இருபாற் கூட்ட இயலும் தனித்தனி விளங்கின!

இத்தகு நிலையை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? 'என்னே என்னே' என்று இரங்கியும் ஏத்தியும் நின்றாரோ?

அதனால்,

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"

என்றாரோ?

(72)

19-12-91 'தினப்புரட்சி' நாளிதழ் செய்தியை உட்கொண்டு வெளிப்பட்டது

இது.