உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.

நோய்!

கணவன் இல்லை.

கைம்மை வாழ்வு.

ஆனால், ஆறு குழந்தைகளுக்குத் தாய்!

அவளே, குடும்பத்தின் காவல்!

அவளே, குடும்பத்தின் வருவாயும் வாழ்வும்!

நொந்தும் வெந்தும் வாழ்ந்த அவளுக்கு, வந்தது சிறுநீரக

ஒன்றுக்கு இரண்டு - சிறுநீரகமும் செயல்படவில்லை!

அடுத்து உதவுவார் ஒருவரும் இல்லை.

கொடுத்து வாங்கும் வாய்ப்பும் இல்லை.

என்ன செய்வாள் ஏழைத் தாய்?

வாழ வாய்ப்போ இல்லை!

வாழ வாய்த்தால், குழந்தைகளை வாழ வைக்கலாம்!

எவரோ தூண்ட ஏதோ ஓர் இதழில் அறிக்கை விடுத்தனள்;

.

குருதியின் இனம் 'பி +' ; "ஆறு குழந்தையர் வாழ்வை எண்ணி, அருளால் சிறுநீரகம் அளிப்பார் உண்டோ?" என்றது அறிக்கை.

அறிக்கை கிளர்ந்தது தில்லியில் இருந்து.

அறிக்கைப் பயன் கிளர்ந்தது பம்பாயில் இருந்து.

வேலை தேடும் இளைஞர்.

வேறு வகையும் இல்லா இளைஞர்.

"அறுவரைக் காக்க, அன்னையைக் காப்பேன்;"

என்னைப் பெற்றவர் என்றால் என்ன?