உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

அவர்களைப் பெற்றவர் என்றால் என்ன? தாய்க்கு உதவுதல் பேறெனத் தாவினார்.

மருத்துவமனையை நண்ணினார்;

உடலாய்வு முடிந்தது;

குருதியினமும் பொருந்தி நின்றது

கொடை நிலையும் அமைவாகியது!

எடுத்தலும் கொடுத்தலும் இயல்பாய் நிகழ்ந்தன. இருபால் உடலமும் இனிதில் தேர்ந்தன.

141

பெறா மகனைப் பெற்ற அன்னை உச்சி குளிர்ந்தாள்! பெறாத் தாயைப் பெற்ற தாயாய்ப் பேண வாய்த்த பேற்றைப் போற்றி வணங்கினார் இளைஞர்.

அழையா அமுதாய்த் தேடி வந்து ஆருயிர் வழங்கிய அருமை ளைஞரை மருத்துவ உலகம் மனநெகிழ்ந்து பாராட்டியது. மருத்துவக் கழகச் சார்பில் மாண்புறும் இளைஞர்க்கு ஆயிர உருபா அன்பளிப்பாக வழங்கினர்.

99

நன்றியுரைத்த இளைஞர், "நன்கொடை நோக்கி வந்திலேன்; இந்தத் தொகையைத் தலைமையமைச்சர் நிதியில் சேர்க்க' என்றார்.

மருத்துவ உலகமும் நோயர் உலகமும் ஒன்றில் ஒன்று உச்சமாய் வியந்து நின்றன.

இத்தகு காட்சியை வள்ளுவக் கிழவர் கருதிக் கருதிக் கண்டாரோ?

என்னே என்னே என்று தம்மை மறந்து நின்றாரோ?

அதனால்,

“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு"

என்றாரோ?

(80)