உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

சொத்துத் தகராறு ஒன்று.

எதிரிட்டு இருவர், இல்லாக் கால் தகராறு உண்டோ?

ஒருவர் முந்தி வழக்குத் தொடுத்தார்;

அதனை மறுத்துத் தம்பால் ஆவணம் உண்மை காட்டினார்

ஒருவர்.

உரிய நிலத்தை நேரில் கண்டு, ஊரார் சான்றைக் கேட்டு, உண்மை அறியத் தீர்ப்புத் தருதற்கு உரிய ஆட்சியர் சென்றார். இடத்தைக் கண்டார்.

இடத்துக்குரிமை தத்தமக் கென்று நின்றவர் தம்மை

உசாவினார்.

ஊரவர் சான்றுகள் திரட்டினார்.

ஆவணச் சான்றையும் ஆய்ந்தவர்.

ஆய்வின் இடையே ஒரு மின்னல்.

ஆவணம் எழுதியவர் பெயரை அறிந்தார்.

அவர் தாம் இருக்கும் ஊரையும் அறிந்தார்.

அள்ளூர் என்பதைக் கேட்டார்.

வழக்கை மறுநாள் ஆய்வுக்குத் தள்ளி வைத்தார்.

வந்த குதிரையில் வழக்கம் போல ஏறி அள்ளூர் சென்றார்.

அள்ளூர் சிற்றூர்.

அவ்வூர்க் குடிசையுள் ஒன்று.

அதன்முன் நின்றது குதிரை.

குதிரையில் இருந்து இறங்கினார் ஆட்சி அலுவலர்.

'ஐயா' என்றார்.