உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

147

'ஆரது' என்றதும் அந்தக் குரலில் தம்மை இழந்து தாவிச் சென்றார்.

மின்னெனச் சென்று, முன்னர் எய்தி, நெடுஞ்சாண் கிடையாய் வீழ்ந்து வணங்கினார்.

திகைத்துப் போன முதியவர் திடுமென எழுந்தார்.

பற்றிப் பிடித்துப், பரிவோடு தூக்கிப், பார்த்ததும் வியப்பொடு, 'பட்டாபி' என்றார்.

"ஆமாம் ஐயா; உங்கள் பிள்ளை பட்டாபியே!

அலுவலாய் இங்கே வந்தேன்.

ஆவண எழுத்தில் தங்களை கண்டேன்.

காணத் துடித்துக் கடிதில் வந்தேன்.

தங்கள் தயையின்றானால் எளியேற் கிந்நிலை எய்தி இருக்குமோ?" என்றார் பட்டாபி.

முதிய கிழவர், முத்துவீர உபாத்தியாயர், முதிர்ச்சி நீங்கி ளைய வீரராய் எழுச்சி கூர்ந்தார்.

கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கும், குனிந்து சோர்ந்து தொய்ந்த கிழவரை ஏறு நிலையில் எழுச்சியூட்டி நிமிர்த்தின!

என்னே பணிவு! என்னே நல்லுளம்! என்று வியந்தார் அந்தக் கிழவர் முத்துவீரிய இலக்கணம் இயற்றிய உறையூர்ப் புலவர் முத்துவீர உபாத்தியாயர்!

இத்தகு பணிவுக் காட்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே என்னே என்று வியந்து நின்றாரோ?

"எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து'

என்றாரோ?

""

(125)

தந்தை புலவர் மீனாட்சி சுந்தரர் சொல்ல மைந்தர் பெரும் புலவர்

தங்கவேலனார் சொல்லக் கேட்ட செய்தி இது.