உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

குதிரையின் மேலே ஏறி வந்தான் ஒருவன்.

ஓட்டமானால் அப்படி ஓட்டம்!

அந்த ஓட்டத்தைத் தொடவும் முடியாமல் விடவும் முடியாமல் மற்றொரு குதிரையின் மேலே ஒருவனும் வந்தான்!

வழிநடை ஒருவன் குதிரையில் வருபவன் வனெனக் கண்டான். வழியை விட்டு ஒதுங்கினான்.

தலையில் இருந்த தொப்பியைக் கழற்றி, பணிவாய்க் குனிந்து வணக்கம் செலுத்தினான்.

விரைந்த குதிரை அழுத்திய பிடியால் நிற்கத் திணறி

நின்றது.

குதிரையை விட்டுக் கீழே இறங்கினான் குதிரையன்.

தலைமேல் இருந்த தொப்பியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு வணங்கினோன் குனிவிலும் குனிந்து வணங்கினான். குதிரை மேலேறிப் பறந்தான்; விரைந்தான்.

விரையும் போதே வினாவினான் உடனவன்;

"இப்படி இறங்கித் தொப்பியை எடுத்து இந்த ஏழையைக் குனிந்து வணங்க வேண்டுமா?"

வணங்கிய நல்லோன் சொன்னான்.

"நாட்டின் தலைவன் நயக்கும் பணிவிலும் தலைவன்;

இதனை நாட்டுதல் கடமை

பணிவினால் இந்த ஏழை என்னை வெற்றி கொள்ள

விட்டிட மாட்டேன்

திகைத்துத் திணறித் திக்குமுக்காடினான்.

வினாவை எழுப்பி வாங்கிக் கொண்டவன்.