உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.

'பெட்டியடிப் பையன்' அவர்

காசுப் பெட்டிப் பக்கத்தில் இருத்தல், ஏவிய பணியை ஏனென்று கேளாமல் செய்தல்; இப்பணி அவருக்கு; கடமை தவறாக் கருத்து மிக்கவன்.

கடைப்பணி எனினும் தலைப்பணியாக வாய்மைக்கு டந்தந்தவர்.

"பொய் கூறுபவன் உண்பது, சோறு அன்று வேறு' என்பது அவர் வீட்டுப்பாடம்!

கடை முதலாளி உள்ளே இருந்தார்.

அவரைத் தேடி ஒருவர் வந்தார்.

கடையின் உட்புறம் வீடு.

வீட்டுள் சென்று செய்தியுரைத்தார் பையன்.

வந்தவர் யாரெனக் கேட்டு 'இல்லை' என்று சொல்லச் சொன்னார் 'கடை' யர்.

'உள்ளே இருக்க இல்லை என்று உரைக்க மாட்டேன் என்றார் பையன்.

கடையர் சீற்றம் தலைக்கு ஏறியது.

காட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றே அமைத்தார்.

முறை மன்றத்தில் இருந்து வழக்கொன்றுக்கு முன்னறிவிப்பு வந்தது.

என்று

அதனைக் கொண்டு வந்தவர் 'முதலாளி உள்ளாரா' கேட்டார்.

'பார்த்துச் சொல்கிறேன்' என்று போனார் பையன்.

இருப்பதும் இல்லாததும் அறியார் ஆதலின் அறியப்

போனார்.