உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

151

உள்ளே போனதும் உங்களை 'அமீனா' தேடி வந்துளார்

என்றார்.

இல்லை என்று சொல்லிப் போடு' என்றார் உள்ளே இருந்தவர்!

'இருக்கும் போது இல்லை என்று சொல்ல மாட்டேன் என்றார் பையன்.

இரண்டாம் நிகழ்ச்சி ஆதலால் 'இரு இரு' என்று கறுவிக்

கொண்டார்.

கணக்கரை அழைத்து ல்லை' என்று சொல்லச் சொன்னார். வந்த ஆள் போனதும் வந்தது சீற்றம்; பொங்கி எழுந்தார் பெரியவர்.

"பொய் சொல்ல மாட்டாயோ நீ; எங்கும் போய்த் தொலை" என்றார்.

ஊர்க்கே போகிறேன்" என்று நாடு கடந்து தம் நாட்டுக் கோட்டைக்கே வந்தார்!

பண்டித மணியிடம் பைந்தமிழ் கற்றார்.

அண்ணாமலையில் புலமை யுற்றார்;

அங்கேயே பணியிலும் அமர்ந்தார்.

காரைக்குடியில் புலமை விரித்தார்.

முனைவர் பட்டமும் முயன்று பெற்றார்.

கல்லூரித் தலைமையும் உற்றார்.

அண்ணாமலையில் துறைத்தலைமை ஏய்ந்தார்.

மதுரைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தாகவும் வேய்ந்தார்!

தமிழ்க்காதல், வள்ளுவம், காப்பியப் பார்வை என்றே என்றே அன்னைக்கு அணிபல பூட்டினார்!

தமிழ்வழிக் கல்வி தழைக்கத் தம்மைத் தொண்டிற்

படுத்தார்.

பொய்யா நோன்பைப் பையல் நிலையிலேயே பசையெனச் பற்றிய வசையிலா சையோர், பெயரை இயம்பவோ

வேண்டும்?

.