உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

எடுத்தாள் நூலை; கண்டில் இருந்து.

எடுத்தாள் துணியை; பையில் இருந்து.

மூன்றையும் கொண்டு முனைந்தாள் பணியில். காலாம் கையால், நூலை முறுக்கினாள்.

மற்றொரு காலாம் கையால், ஊசியை எடுத்தாள். நூலை ஊசித் துளையில் நுழைத்தே உருவினாள். வேண்டும் அளவில் நூலை அறுத்தாள்.

தையல் அளவாய் நூலைக் கொண்டாள். சீலையை எடுத்துப் பிடித்துக் கொண்டாள், ஒருகால் விரல்களின் ஊடே.

ஊசியை எடுத்துப் பிடித்துக் கொண்டாள்

ஒருகால் விரல்களின் ஊடே.

ஒழுங்காய்த் தைத்தாள் தையல்!

கைகள் இருந்தும் கண்கள் இருந்தும் ஊசித் துளைக்குள் நூலை நுழைக்க அப்பப்பா! நாலு பக்கம் எழுதி விடலாம்! இவளுக்கு என்ன ஆற்றல்! என்ன தேர்ச்சி!

என்னையே மறந்து நின்றேன்!

கண்ணாடி எடுத்தாள். சீப்பும் எடுத்தாள்.

கட்டியிருந்த தலையைப் பிரித்தாள்.

சீவிச் சீவி வகிடு எடுத்தாள்.

தழையத் தழையப் பின்னல் முடித்தாள்.

கொண்டை ஊசியை இங்கும்

கொண்டாள்.

அங்கும்

அங்கும் குத்திக்

நறுமணப் பொடியை நலுங்கா தள்ளி நயமாய்ப் பூசினாள். கொத்துச் சரத்தை எடுத்துக் கூந்தலில் சூடிக் குலுங்கி நகைத்தாள்!

பொட்டுப் புட்டியை எடுத்துக் கொண்டு தொட்டுத் துலங்க நெற்றியில் இட்டாள்! ஒப்பனை முடிந்தது ஓ ஓ!