உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.

அவளுக்குக் கைகள் இரண்டுமே இல்லை.

ஆம்! தோள் மூட்டுக்குக் கீழே அறவே இல்லை. அவளுக்கு அகவை பதினாறு இருக்கும். கால்களே கைகளாய் ஆகிவிடுமோ?

மண்ணெண்ணெய் அடுப்பை எடுத்தாள்.

மூடியைத் திறந்தாள்.

புட்டியில் இருந்து எண்ணெய் விட்டாள்.

மூடியைத் திருகினாள்.

திரியைத் திருகிக் கருக்கைத் தட்டினான்.

தீப்பெட்டியை எடுத்தான்.

ஒற்றைக் காலில் பெட்டி.

ஒற்றைக் காலில் குச்சி.

குச்சியை உரசித் திரியை மூட்டினாள்.

எரியும் அடுப்பு மேல், சட்டியை வைத்தாள்.

குவளையில் இருந்த பாலை எடுத்துச், சட்டியில்

ஊற்றினாள்.

-

மூடியை எடுத்துச் சட்டியை மூடினாள்.

சுட்ட பாலை எடுத்து, வட்டையில் விட்டாள்.

வட்டைக்கும் குவளைக்கும், மாற்றி மாற்றி ஆற்றினாள்.

ஆறிய பதத்தில் பாலைத் தன் வாயில் ஊற்றினாள்!

வந்த பணியை மறந்தே நின்றேன்!

எடுத்தாள் ஊசியை; பெட்டியில் இருந்து