உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

செய்யாமல் செய்த உதவி அது.

அதற்கு நான் செய்ததோ. நன்றியறிதல்!

வாங்கிய கொடையை மீளக் கொடுக்க வாய்ப்பு வந்ததே; அதற்கு நன்றி” என்றான் ஊனமில்லா முழுமையன்! கூப்பியகையொடு கொள்கைத் துடிப்பொடு கிளர்ந்து சென்றான், செல்லும் இடத்திற்கு!

இத்தகு மேதகைக் காட்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே என்னே என்று வியந்து நின்றாரோ?

அதனால்,

“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு'

என்றாரோ?

(997)

செய்தி - தினமலர் 26-1-92

அரிமா ஆளுநர் இரகுநாதர் - மயிலாடுதுறைப் பொழிவு.