உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன்.

10.

கால் பழுது பட்டான் அவன்.

வயிற்றைக் கழுவ இரவல் எடுக்கும் நோக்கன் அல்லன்

வாழத் துடித்தான்; வாழ்வுக்காக உழைக்கத் துடித்தான். அவன் துடிப்பு அரிமாக் கழக அமைப்பு ஒன்றற்கு எட்டியது. அரிமாக் குழும்பு அவனுக்குச் செயற்கைக் பொருத்தும் செலவை ஏற்றுச் செய்வன செய்து முடித்தது. புதிய ஆள் ஆனான்!

கால்

போன இழப்பைத் திரும்பப் பெற்ற பூரிப்பில் கிளர்ந்தான். தொழிலில் துலங்கும் போதோர் அறிவிப்பு; ஓர் அரிமா அமைப்பின் அறிவிப்பு:

"சிறுநீரகம் இழந்தார் ஒருவர்க்குச் சிறுநீரகம்

உதவுவார் வேண்டும்;

உதவுவார்க்கு உரிய அளவில் தொகையும் வழங்கும்

செயற்கைக் காலன் ஓடி வந்தான்.

சிறுநீரகம் தருவதற்கு இசைந்து நின்றான்.

பொருந்தியும் இருந்தது; பொருத்தவும் பட்டது.

அறுவை தேறி விடைபெறும் பொழுது!

"எவ்வளவு தொகை வேண்டும்?" என்றோர் வினா.

"நல்லதோர் பெருநகை!" அதன் விடை.

"தொகை வேண்டுவது இல்லை!

கிடைத்த வாய்ப்புக்கே நன்றி!

கால் உதவியது அரிமாக் குழும்பு!