உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈது!

வையகம் தழுவிய வாழ்வியல் ஆடல்! ஆடல்! ஆடியே தீர்வேன்!

அயர்ந்தனர் பெற்றோர்!

குருதி சொட்டும்; சொட்டச் சொட்டச்

சோர்தல் இன்றிப் பயின்றாள்!

எந்த அரங்கில் அரங்கேறினளோ,

அந்த அரங்கில் மீண்டும் அரங்கேற்றம்;

ஆண்டுகள் பதின்மூன்று இடைவெளி! அப்பா! பயிற்சி, பயிற்சி!

காலை இழந்தும் கலைமயில் ஆட்டமா?

முன்னினும் கூட்டம் மூன்று மடங்கு!

அவையே அதிர்ந்தது!

163

தந்தை, தாம் தரு மகளின் காலைத்தொட்டு வணங்கினார்! சிற்பி வடித்த சிலைக்குச் சிற்பியே வணக்கம் செய்தமை

“காலை இழந்தவள் ஒரு கல்லைத் தாண்டுகிறாள்

செய்தித்தாள் செய்த சிறப்பு ஈது!

நன்கொடைத் தொகையோ ஐந்திலக்கம்

எதிர்பாராத ஓர் அறிவிப்பு;

ஆடிய அவளே அறிவித்தாள்:

"இத்தொகை அனைத்தும் வைப்பில் வைக்கப்படும்.

"வட்டித் தொகையால் ஆண்டுதோறும் வாய்த்த அளவில் வாய்ப்பில்லோர்க்கு இலவயமாகக் கால் வழங்கற்கு ஆகும்!”

வியப்பாய் வியந்தது கூட்டம்!

திரைப்படம் தேடி வந்தது.

66

ஆட வேண்டா; ஆடல்போல் காட்டின் போதும்' என்றது!

"இல்லை! இல்லை! பொய்ம்மைக் காட்சி என்ன, பொம்மைக் காட்சி மெய்யாய் ஆடுவேன்" என்றாள்.