உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.

பள்ளியில் படிக்கும் சிறுவன் தான் அவன்.

வீட்டில் இல்லை; வெளியில் இல்லை;

பள்ளியில் இல்லை; பார்த்துத் தேட எங்கும் இல்லை!

ஒரு நாள் -இரு நாள்கள் ஓடி விட்டன.

மூன்றாம் நாளும் காணவில்லை.

முட்டி மோதினர் பெற்றோர்.

பிள்ளையைத் தேடி அலைந்தவர் உள்ளத்தில் ஒருபொரி! விறகு போடும் இடத்தைத் தேடாது விட்டு விட்டோமே! இருண்ட அறையுள் மறைந்து இருந்தால்!

விளக்கை ஏற்றி அடியடியாக எட்டு வைத்து உள்ளே

போயினர்

பழைய பொருள்களும் விறகும் பிறவும் போட்டு வைக்கும் அவ்வறைக்குள்ளே, முடங்கிக் கிடந்தான் சிறுவன்.

ஆள்வரவு கண்டு விழித்தான்.

எழுந்தான் அல்லன்.

எழுப்ப வேண்டினர்.

"எழுப்பாதீர்கள்; இன்னும் கொஞ்சம் பொறுங்கள்; குஞ்சு பொரித்து விடுவேன்" என்றான்.

"குஞ்சு பொரிக்கவா என்ன உளறுகிறாய்" என்று கையைப் பிடித்துத் தூக்கினர்.

அடிவயிற்றோடு கோழி முட்டையை வைத்துக் காலை அணைத்துக் கிடந்த சிறுவனைக் கையால் அணைத்துத் தூக்கினர்.